திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு தலத்திற்குள்ளேயே இன்று காலை 8 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த வெடி தயாரிப்பில் ரவி, ஜேம்ஸ் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பட்டாசு தயாரித்தபோது திடீரென பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவி ( 68) உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட […]
மத்தியப் பிரதேசத்தில் நச்சு கலந்த உணவால் 200 கிளிகள் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார். பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக வனத்துறை […]
காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு தென்னை மரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததில் பெரியசாமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள […]
முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு
உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மொபைல் போனின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஊழியர் கதவை பல முறை தட்டியும். அவரை அழைத்தும் இருக்கிறார். ஆனால், பதில் எதுவும் வரவில்லை. இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகம் சார்பில் […]