சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கின் டவுன்டவுண் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவரைக் கண்டதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். அங்குள்ள கடைவீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். […]

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி வந்த போதிலும், அவருக்கு ஏற்பட்ட இந்த இதய பாதிப்பு ஆரோக்கியம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.