கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால் 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது.அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் […]
கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. […]
திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் இராப்பத்து திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் […]