விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் […]

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல

உலக அளவில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆப்பிள் நிறுவனம், பழைய கூகுள் குரோம் (Google Chrome) பதிப்புகளைப் பயன்படுத்துவதால் சைபர் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், அதற்குப் பதிலாக ஆப்பிளின் சொந்த பிரவுசரான ‘சபாரி’ […]

தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்தியேக வார்டுகளை அமைக்க உத்தரவு. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தல். நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் வீடுதோறும் கொசு உற்பத்தியை […]

தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி மேலாண்மை குறித்து நிர்வாகிகளுக்கு அவர் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ‘திராவிடப் பொங்கல்’ என சிறப்பாகக் கொண்டாடக் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுத் தமிழகம் முழுவதும் கழகத்தினர் முன்னெடுத்த கொண்டாட்டங்கள் மக்களிடையே […]

கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியார் பொள்ளாச்சி சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து உலா வந்தது ஆழியார் அணைப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையில் இருந்து வெளியேறி அணை பகுதிக்கு சென்றது இதனை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து […]

விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற […]

மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  மாவட்ட  நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிககனமழை பெய்யக்கூடும் […]