என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்
சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்: ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கருத்துக் கணிப்புகளின் […]
எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என விமர்சித்தார். பியூஸ் கோயல் தமிழக அரசியல் நிலை அறியாமல் பேசுவதாகவும், அவரது முயற்சி வெற்றியடையாது என்றும் கூறினார்.
எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
சென்னை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இரு தலைவர்களும் நீண்ட நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதால், தமிழக அரசியல் வட்டாரங்களில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும் கூட்டணி வாய்ப்புகள், தொகுதிப் பங்கீடு, தேர்தல் உத்திகள் உள்ளிட்ட முக்கிய […]
எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனம் குறித்து அவர், “யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை […]
எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர். * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை. *2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக இல்லாமல் கூட்டணியை முறித்தவர் இ.பி.எஸ்; கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் * கொடநாடு கொலை, கொள்ளை […]