வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]