கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார். உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த […]
வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது
திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை குளித்தலை, மணப்பாறை ஆகிய பகுதிகளில் வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது