தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட 9 வழக்கறிஞர்களின் பெயர்கள், நீதிபதி பணியிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐகோர்ட் கொலீஜியம் குழுவில் நீதிபதி நிஷா பானு இடம்பெற்ற நிலையில் அவரது பங்களிப்பின்றி பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் நீதிபதி நிஷா […]

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் தீவிர சோதனை […]