ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று காலை 8:51 மணியளவில் திடீரென தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகளில் ஒரு ஏசி (AC) பெட்டியும், இரண்டு பொதுப் பெட்டிகளும் (General Coaches) அடங்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் […]
ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். விபத்தில் சிக்கிய ஆறு பேரும் காயமடைந்தனர். […]
டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு
ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சரணடைந்தவர்களில் ஒரு டிவிஷனல் கமிட்டி உறுப்பினர், மற்றும் 6 ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் அடங்குவர். சரண் அடைந்தவர்கள் அனைவர் மீதும் ரூ.2 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது […]