அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…

பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின் வழக்கில் அன்புமணிக்கு எதிராக உத்தரவு வந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பாமக உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.இருப்பினும் மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி […]

தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் சின்னத்தை மோதிரம் (Ring) என்று தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி மனு அளித்த தவெக, ஆட், கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை பட்டியலிட்டது. அதில் இருந்து ஒரு சின்னம் இறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தவெக சின்னம் […]

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்திடம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்து மாணிக்க வேலன், கண்டோன்மெண்ட் பாஜக மண்டல் தலைவர் கார்த்திக் தலைமையில்பாரதிய ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் அம்பேத் சாக்ரடீஸ், மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-நாங்கள் பஞ்சபூர் புதிய பேருந்து நிலையத்தில் எங்களது பாரதிய ஆட்டோ […]