ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்குடியில் அரசு நலத்திட்ட […]

திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]

ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியது அவர் பதவிக்காக அல்ல அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக முறையில் போராடுகிற அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் அதிகரிப்பதாக […]