மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர். வெயிலின் காரணமாக மயங்கி சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் 10 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. கோரக்பூரில் இருந்து மீரட் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதன் தொடர்ச்சியாக, பின்னால் வந்த 3 பேருந்துகள் […]

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் இடிபாட்டுக்குள் சிக்கி பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் சென்ற […]

கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து […]

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரச்சார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிப்பு நடந்த கார் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் திடீரென வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. சம்பவ இடத்தில் காரின் பாகங்கள் சிதறி, சுற்றியுள்ள வாகனங்கள் சேதமடைந்தன.வெடிப்பு நடந்த உடனே […]