தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…
தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். இந்த ஓ.டி.பி சரிபார்ப்பு முறை விரைவில் அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, ஓ.டி.பி அடிப்படையிலான தட்கல் அங்கீகார அமைப்பு ரயில் எண் 12009/12010, மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸில் செயல்படுத்தப்பட்டுள்ளது. […]