சிறுவன் கொலை-கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை
சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் […]