புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் கடலோரப் பாதுகாப்புக் […]