சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏர் […]

கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நேரம் குறித்து அறிந்து கொண்டு பயணிகள் விமான நிலையத்துக்கு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பனிமூட்டம் […]