ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார்.மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதுபோதையில் மனைவியிடம் மதன்ராஜ் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இலக்கியா அருகே […]