கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது […]
அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி
உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]
நயினார் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை.. கனிமொழி பதிலடி
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாட்டில் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வரக்கூடிய மகளிர் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் மதியத்திலேயே புறப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டு, இரவு முடிவதற்குள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் மாநாட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று […]
திருப்பூர்- டிச., 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக மேலும் பலப்படுத்தும் நோக்கில், (திமுக) சார்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.திமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இத்தகைய பெரிய மாநாட்டை நடத்துவதன் மூலம் திமுக பின்வரும் இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை போன்ற […]
கனிமொழி எம்பியால் காப்பாற்றப்பட்ட மாற்றுதிறனாளிகள் உணவகம்
சென்னை, திருவல்லிக்கேணியில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கேப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையரக அலுவலகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக, முதல் தளத்தில் செயல்பட்டு வந்த மியூசியம் கஃபேவை […]