கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து
கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய […]
எம்பி கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் […]