தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளது.இந்த விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்ட திட்டமிட்டுள்ளது.அரசினர் கலைக் கல்லூரியில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்காமல் பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு ஆணையம் அரசு […]
கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்
கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் […]
புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி கணேசர் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி […]
லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவர்கள் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டுபைக்கில் காரைக்குடி யைநோக்கிசென்றபோது திருமயம் தாமரைக்கண்மாய் அருகில்டாரஸ்லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இதுதொடர்பாகதிருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை […]