அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏராளமான துவரம் பருப்பு மூட்டைகள் நெடுஞ்சாலையிலும் பள்ளத்திலும் […]
மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி
தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்தில் சிக்கிய 193 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 13 […]
முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..
தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் காயம் – லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..
தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மலேசிய கடல்சார் அமைப்பு தெரிவித்ததாவது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட அந்தப் படகு லாங்காவி தீவு அருகே மூழ்கியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 170 சதுர கடல் மைல்கள் பரப்பளவில் […]