நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் இருந்த வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் தப்பியுள்ளார். நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணி சபரிவாசன் நாய் கடித்ததை வீட்டில் […]

பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில்; “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் (காஞ்சிபுரம் மாவட்டம்) கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். […]

காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீ திபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து ஐகோர்ட் பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலை-யில் ஆய்வுப் படிப்பு

அம்பேத்கர் – கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு!தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிவான எஸ்ஓஏஎஸ் (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி) ஒரு புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அம்பேத்கர்-கலைஞர் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி வருகை ஆய்வாளர் படிப்பு (Ambedkar Kalaignar Visiting Fellowship for Social Justice and Federalism) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம். அம்பேத்கர் […]

விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். QR உடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேருக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதனை தவெகபொதுச்செயலாளர் ஆனந்த் அறித்துள்ளார். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்புநடைபெறுகிறது. காஞ்சிபுரம் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த பிரச்னைகளை குறித்து இந்த மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது எனதவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.