பஞ்சப்பூரில் காந்தி மார்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்கனும்-கலெக்டரிடம் மனு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும்,பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.காதர் மைதீன், செயலாளர் என்.டி..கந்தசாமி, பொருளாளர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில்,அவைத் தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பாலசுப்பிரமணி,ஒருங்கிணைப்பாளர் […]