கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 7:30 மணியளவில் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தினேஷின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. […]