கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த ராம் நித்திஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். எனினும் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து அவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த விஜய […]