சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் […]
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்
கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது. சாலையில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் […]
ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியின் நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் […]
டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து
டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இரண்டு வாகனங்களுக்கும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பஸ் மற்றும் காரில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து காவல்துறை […]