ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வித் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘காலநிலைக் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காலநிலை மாற்றத்தின் சவால்களை […]