திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகவும்.. நான்கு மாதங்களுக்கு மேலாகி இலுப்பக்கோரை கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், குடிநீர் எடுப்பதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை குடிநீர் கேட்டு மனுக்கள் […]