பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை
மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் […]