குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களைச் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 7 பேரைச் சிதம்பரம் நகர மற்றும் தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 260 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் […]

திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியமங்கலத்தில் […]