முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு […]
பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!
இதுதொடர்பாக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற […]
ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், பெண் இயக்குநர்களின் படங்கள் ஆஸ்கார் கமிட்டியால் நிராகரிக்கப்படுவதாக ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான நடாலி போர்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலகப்புகழ் பெற்ற ‘ஸ்டார் வார்ஸ்’, […]
இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி
ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்” என்றார்.
வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?
வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிப்புகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது. இயற்கை வளங்கள், குறிப்பாக […]
பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டல குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- எல். ரெக்ஸ் (காங்கிரஸ்): கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாட்டு […]
அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது; எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அன்புமணி செய்தது பச்சை துரோகம். ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்.பாமக இயக்கத்தை களவாடிவிட்டு, யாரின் உரிமையை மீட்க செல்கிறீர்கள்? ஐயாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற நீங்கள், […]
செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்” என்று கூறி நிராகரித்தார். “என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் […]