கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் […]