தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்
அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ். தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகக் கூறி வரும் ஓ.பி.எஸ்., விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்குப் […]
அன்புமணியுடன் கூட்டணி- ஏமாந்துதான் போவார்கள்-பாமக MLA
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.
அனைத்து கட்சியும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன”- பிரேமலதா
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம்” என்றார். பின்னர் […]