கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், […]