நள்ளிரவில் சுற்றுலா பஸ், கார் மீது யானை தாக்குதல்
கேரளாவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், மூணாறு-மரயூர் சாலையில் நேற்றிரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே இரவு 11 மணியளவில் யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை முதலில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பஸ்சை கடுமையாக தாக்கியது. அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து எறிந்தது. இதன்பின்னர் சாலைக்கு வந்த அந்த யானை சொகுசு கார் ஒன்றை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து […]
5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது.இதில் குழந்தை ஆலின் சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர். இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதற்கு, […]
6 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
கொச்சியில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி 1 வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்யப்பட்டதும், இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரத்திற்கு இரையானதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து […]
சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது
வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது. போலீசார் அந்த லாரியைச் சோதனையிட்டபோது, மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10,000 ஜெலட்டின் […]
பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ […]
மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ், தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (28). இவர்களுக்கு 12 வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு […]
சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை வெளிநாட்டில் இருந்ததால், அந்த சிறுவர்களைத் தானே நன்கு பராமரிப்பதாகக் கூறி, கேரளா திரும்பியதும் அவர்களைத் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தன் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் சம்பத் கடந்த ஒன்றரை […]
திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட நிலையிலும், அந்த இளம்பெண்ணுடன் அவர் தொடர்ந்து நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வைசாக்கை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இனி உயிர் […]
100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி
தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். […]