நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு

கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்’ செய்தார். நடுரோட்டில் அவர் ‛நமாஸ்’ செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி […]

கேரளாவில் வைரலான வீடியோ – பெண் கைது

தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, தீபக் என்பவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவில், பேருந்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் ஒருவர் தீபக் என்பவர் மீது குற்றம் சாட்டி, அது தொடர்பான காணொளியை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், தீபக் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், அந்த […]

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

 கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 16 அன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடி, 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ள […]

சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று 18 படிகளை ஏறி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை […]