நள்ளிரவில் சுற்றுலா பஸ், கார் மீது யானை தாக்குதல்

கேரளாவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், மூணாறு-மரயூர் சாலையில் நேற்றிரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே இரவு 11 மணியளவில் யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை முதலில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பஸ்சை கடுமையாக தாக்கியது. அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து எறிந்தது. இதன்பின்னர் சாலைக்கு வந்த அந்த யானை சொகுசு கார் ஒன்றை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து […]

5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது.இதில் குழந்தை ஆலின் சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர். இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதற்கு, […]

6 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்

கொச்சியில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி 1 வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்யப்பட்டதும், இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரத்திற்கு இரையானதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து […]

சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது

வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது. போலீசார் அந்த லாரியைச் சோதனையிட்டபோது, மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10,000 ஜெலட்டின் […]

பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ […]

மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ், தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (28). இவர்களுக்கு 12 வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு […]

சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை வெளிநாட்டில் இருந்ததால், அந்த சிறுவர்களைத் தானே நன்கு பராமரிப்பதாகக் கூறி, கேரளா திரும்பியதும் அவர்களைத் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தன் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் சம்பத் கடந்த ஒன்றரை […]

திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட நிலையிலும், அந்த இளம்பெண்ணுடன் அவர் தொடர்ந்து நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வைசாக்கை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இனி உயிர் […]

100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். […]

200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப் போலீசார் மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மனைவி சஜிதா (54) மற்றும் மகள் கிரீமா (30). கிரீமாவுக்கும் உன்னி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு […]

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து விழுந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை நடத்திய ஆய்வில், அந்தப் பறவைகளுக்கு ‘எச்5என்1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா மற்றும் கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் […]

திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் அறையினுள் பிணமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பதும், அவருடன் இருந்தவர் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த […]

யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அனில்கிஷோர், தான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்கே சென்று […]

5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஷில்பா தனது மகனை அறையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையிலேயே அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே […]

கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அந்த யானை அலங்கரிக்கப்பட்டு அந்த யானை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பாகன்கள் வந்து அந்த யானை அழைத்து வந்தனர். அப்பொழுது அந்த யானை திடீரென மிரண்டது. அந்த […]

துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் – ருக்ஷானா தம்பதி மற்றும் அவர்களின் 5 குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அஷாப்,14, அமார், 12, அயாஷ்,5, ஆகிய மூன்று குழந்தைகளும், குடும்ப உதவியாளர் புஷ்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே […]

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் பணியாற்றி வந்த வீட்டில் சுகுமாரன் […]

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு, ஷினி தம்பதி. இவர்களது மகள் சித்ரப்பிரியா (19), பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சித்ரப்பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காலடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரப்பிரியாவை தேடினர். அந்த […]

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. இதனால் எதிரே வந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

கேரளாவில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை), வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் தனியார் பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த பேருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் வழியாக சென்றபோது, வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. […]