மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது
கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் , நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]
சென்னையில் சீமான் கைது
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை […]
கவர்னர் காரைத் துரத்திய போதை வாலிபர்கள்: கிண்டியில் அதிரடி கைது
நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கவர்னர் ஆர்.என். ரவி தனது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கவர்னர் காரின் அருகே மிக நெருக்கமாகச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவு போலீசார், வாகனத்தை நிறுத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]
ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது
ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் […]
துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]
சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]
இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு
சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]
உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 15ம் தேதி, 16 வயது சிறுமியின் சகோதரரை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான […]
குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது
திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அந்த பணத்தை வைத்து வீட்டை குத்தகைக்கு எடுத்தார். பிறகு அடகு வைத்த நகையை மீட்பது தொடர்பாக இருவருக்குள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், ராகேஷிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் தொடர்பாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ராகேசை மிரட்டியுள்ளார். மேலும், கைது […]
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்திய தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முக்கிய ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அசாம் போலீசார் குலேந்திர சர்மாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தனியாக செயல்பட்டாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து […]
ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார். அந்த இடத்திற்கு உள்ளாட்சி அனுமதி பெற கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., அன்புக்கண்ணனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை (49) தொடர்பு கொள்ள கூறியுள்ளார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) […]
அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது
திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து 6 கோடி ரூபாய் பெற திட்டமிட்டு பழனியின் நண்பரின் கொடுத்த ஆலோசனை பேரில் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 11 ஏக்கர் நிலத்தை அடமானம் போட திட்டம் போட்டு அங்கு விரைந்துள்ளனர். லோன் அங்கீகரிக்கும் இடத்தில் இருந்த […]
கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்சம் 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள […]
போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாலக்கோட்டில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பாரை உடனடியாக மூட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த தனியார் மதுபான பாருக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட […]
சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது
CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அரசாணை 152, 139, 10 ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும், அனைத்து ஒப்பந்த சுய உதவிக் குழு தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஊதியம் வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையை வாபஸ் பெற வேண்டும், […]
ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி-ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.ரயிலில் தூங்கிய அவர், விருதுநகர் வந்தபோது திடீரென கண் விழித்தபோது அருகில் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் மொத்தம் 9½ சவரன் தங்கச்சங்கிலிகள், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவை இருந்ததாக சக பயணிகளிடம் […]
தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படி நடந்து சென்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொண்டு சென்ற பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 26 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் […]
கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்
வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து வீட்டுக்குள் புகுந்திருந்த மர்ம ஆசாமியை பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு […]
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு
கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரே மகன் வெங்கடேசன் (32) தந்தைக்கு உதவியாக இவரும் விவசாய வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசன் அடிக்கடி மது அருந்திவிட்டு பணம் கேட்டு தந்தையை அடிப்பது வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. […]
குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில் தீவிரவாத தடுப்புப் படையினர் சந்தேகத்துக்குரிய சிலரை கடந்த ஓராண்டாக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள மூன்று பேர் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக […]
14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய […]