கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து
கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வேலை செய்திருக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் சுமார் 5 கடைகள் முழுவதுமாக எரிந்து முழுவதுமாக நாசமாக ஆகின. மேலும் இந்த தீ விபத்து நடந்த இடத்தில் 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து […]
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான மலைச்சாலையில், ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூர், புதுபுத்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் […]