திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.14.11.2025 அன்று ஆட்சியர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், […]
மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு
கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார்: கரூர் மாவட்ட திமுக சார்பில் செந்தில் பாலாஜி வழங்க உள்ளார் என்று தெரிவித்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் ஆர்.டி மலை கிராமத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் […]