அரசுக்கு 4 அம்சக் கோரிக்கை: பிப்ரவரி 2 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் பிரபுசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதன் முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். […]