எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் கோர்ட்டில் ஆஜர்
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகிய இருவரும் ஆஜராகினர். ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை தாக்கியதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பதினெட்டாவது மேஜிஸ்திரேட் முன்பு விசாரணை நடைபெற்றது. இரு தரப்பினரிடமும் நீதிபதி விளக்கங்கள் பெற்றார். வழக்கை முன்னிட்டு இருவரும் கவுன்சிலிங் பெற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. அடுத்த மாதத்துக்குள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. […]