சென்னை- திமுக சார்பில் கும்மி பாடலுடன் பொங்கல்-கோலாகலம்
சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிராமத்தின் கோயிலான படவேட்டம்மன் ஆலய வாசல் முன்பு ஏராளமான பெண்கள் செங்கரும்புடன் 3 பானைகளில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என கோஷங்கள் எழுப்பி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய நிகழ்வான மீனவ பெண்கள் […]
கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்
கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வண்ணக் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் […]
பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்
பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது 100 பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் செழியன் கலந்து கொண்டார் அவர்களோடு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதோடு மத நல்லிணக்க அடிப்படையில் விழா […]