கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103ம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக இன்று நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து […]

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்திபெற்ற முந்தி விநாயகர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த காமாட்சியம்மன் கோவில், பக்தர்களின் முக்கிய […]

திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக் கைதுசெய்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ எனும் பால்பண்ணை மூலமாக அந்தப் போலி நெய் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிப்பதற்குத் தேவையான நெய்யை அனுப்பி […]