சரக்கு ரயிலுக்கு ஒதுங்கியபோது நேர்ந்த விபரீதம் – ரயில் இன்ஜின் மோதி தாய், மகள் உடல்சிதறி பலி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதியதில், தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி, கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியம் (45), மகள் மஞ்சு (25). மஞ்சு தனது கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாகத் தாய் பாக்கியத்துடன் வசித்து வந்தார். இருவரும் கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று […]

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.