கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

காரைக்குடி: மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதல் – 5 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் முறிந்து வாகனம் மீதே சரிந்து விழுந்தன. விபத்தின் போது மின்கம்பிகளில் இருந்து மின்வயர்கள் அறுந்து சாலை முழுவதும் சிதறி விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. […]