சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை
‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை பிராட்வேயைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, சதீஷ் என்பவரைக் காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. […]