தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும். மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி – மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் […]

கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06075) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 4-ந் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06076) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இதேபோல் […]

ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 4 […]