கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு
கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000 ஆண்டு பழமையான சங்கரன்மலைப்பட்டியில் மலை உச்சியில் சௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. […]
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சேலம் சிவதாபுரம் மெயின்ரோடு திருமலைகிரி பகுதியில் சைலகிரீஸ்வரர், சைலாம்பிகா என்ற சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் நித்திய பூஜையை பூசாரி முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது. கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது. கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரும்பாலை […]
புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு பூஜை திருவருள் கருணையால் சிறப்பாக நடைபெற்றது, முத்துக்குடா ,புதூர் தீர்த்தாண்டம் ,மீமிசல்,தீயத்தூர் சுற்று வட்டார 600க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டனர்.