பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன் பயிலும் பிரின்ஸ் ராஜ் சிங் என்ற மாணவர் திடீரென துப்பாக்கியால் அவரைச் சுட்டார். இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மாணவியைச் சுட்ட கையோடு, மாணவர் பிரின்ஸ் ராஜ் சிங்கும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு […]
பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், ஜலந்தர் பகுதியில் இவரது குடும்பத்திற்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது. இன்று காலை 7:50 மணியளவில், ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் […]
பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். (CRPF) வீரர்கள் இணைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த தேடுதல் நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அடர்ந்த மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை […]
சிறுவன் கொலை-கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை
சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் […]
திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவுக்கார இளைஞர் ஒருவருடன் காதலில் இருந்த நித்தி, திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த நித்தி, தனது காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரைத் திருமணம் செய்துகொண்டு […]
கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை
கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காரில் அமர்ந்திருந்த 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.அதன்படி பஞ்சாப்பின் பாரே கிராமத்தை சேர்ந்த குர்தீப் சிங்(27) மற்றும் ரன்வீர் சிங்(19) ஆகிய இருவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக காரில் வந்து […]